குங்ஃபூ நாயகன் புரூஸ் லீ

குங்ஃபூ கலையின் அகில உலக நாயகன் புரூஸ் லீ

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் #புரூஸ்_லீ. இன்று #தற்காப்புக் கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும், கால்களும் எதிரியைத் தாக்கும் வேகத்திற்கு அன்றைய திரையுலக தொழில்நுட்பத்தால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்கு ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.

குங்க்பூ கலையின் கனவு நாயகனாக

புரூஸ்லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந்தேதி 🔸அமெரிக்காவில் உள்ள 🔹சான் பிரான்சிஸ்கோ மாகாணம் #சைனா_நகரப் பகுதியில் உள்ள ▪ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் #லீ_ஹோய்_சுவென் மற்றும் #கிரேஸ் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகர். புரூஸ்லீக்கு அவரது பெற்றோர்கள் #லீ_ஜூன்பேன் என பெயர் வைத்தனர். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக #புரூஸ் எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதங்கள் ஆனபோது அவரது குடும்பம் 🔸ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை ▪லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பின்னர் ▪புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். 
1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் #கேங்கஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெற 🔸சீனாவிற்கு அனுப்பப்பட்டார். தற்காப்புக் கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ, சீனத் தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே, ஜுடோ, குத்துச்சண்டை போன்ற அனைத்து வடிவங்களும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களைச் சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே #புரூஸ்லீ_குங்பூ என அழைக்கப்பட்டது. இதனைத் தத்தவப் பாடத்துடன் சேர்த்து #ஜே_கேடி எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். தற்காப்பு கலையின் உச்சத்தைத் தொட்ட புரூஸ்லீ தத்துவம் முதுகலை படித்தவர். மேலும் இவர் ஆழ்ந்த #தத்துவ_ஞானம்உடையவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு நிகழ்வே. தற்காப்புக் கலையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டு சென்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ அளித்த விளக்கம் ஒன்று. களத்தில் எதிரி இருக்கக்கூடாது. ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு விறுவிறுப்பான நாடகம் போல சண்டை அமைய வேண்டும். போட்டிக் களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்து எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத் தயாராக இருக்க வேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். #சண்டை_இல்லாத_சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ.

புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது 18 வயதிற்குள் 20 படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது #பேட்மேன்பட தயாரிப்பாளர் 🔹வில்லியம் டோசியர் பார்வையில் இவர் பட்டது இவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புரூஸ்லீ அமெரிக்காவில் இருந்தபோது 
😶‘தி கிரீன் ஹார்னட்’, 
😶‘அயர்ன் சைடு’, 
😶‘ஹியர் கம் த பிரைடுசு’ 
ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவருக்கு #கோல்டன்_ஹார்வெஸ்ட்_கம்பெனிதயாரிப்பாளர் 🔹ரேமண்ட் சௌ ஒரு படத்தில் நடிக்குமாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டார். ரேமண்ட் தயாரிப்பில் இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு #பிக்பாஸ் என்ற பெயரில் வெளிவந்தது. வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும், #Crawn_Colony_Cha_Chaசாம்பியனாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர்காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 💰12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 1972ல் வெளிவந்த #பிஸ்ட்_ஆப்_பியூரி திரைப்படம் 💰15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று தந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய #வே_ஆப்_தி_டிராகன் திரைப்படம் புரூஸ்லீயின் புகழ் உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்பு கலையையும் பிரபலமடைய வைத்தது. வே டூ த டிராகன் படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த #கராத்தே_மாஸ்டர்_சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

தன் இளம்வயதிலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவிய அவரால் சில படங்கள் மட்டுமே நடிக்க முடித்தது என்றாலும், அவரது மிகப்பெரிய வெற்றிப்படம் உலகோர் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் #என்டர்_தி_டிராகன். இந்த படத்திற்கு ஏராளமான சிறப்புகளும் உண்டு. ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும்ஒளிப்பதிவு, செவியைக் குளிர வைக்கும் இசை எதுவுமே இல்லையென்றாலும், நரம்புகள் முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனைக் கட்டிப்போடச் செய்தது ‘என்டர் த டிராகன்’. இந்தப் படம் உலகெங்கும் உள்ள ஆக்சன் ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்று பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. இதனால் உலகைக் குலுக்கிய படங்களின் பட்டியலை சேர்ந்தது ‘என்டர் த டிராகன்’. இதன் வசூல் சாதனை அமெரிக்காவில் மட்டும் 💰850,000 டாலர்கள்
" ஆனால் அந்த வெற்றியை அவரால் பார்க்க முடியாமல் போனது.

தலை வலி என்று படுக்கச் சென்றவருக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழுந்திரிக்கவில்லை. பிறகு 🔸ஹாங்காங் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் மரணத்தைத் தழுவினார்
" இன்றளவும் அவர் மரணம் ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர், முன் கோபத்துடன் நடந்து கொண்டது, ஏராளமான எதிரிகளை அவருக்குச் சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்கள் பறி கொடுப்பதும் சாதாரணம். திரையில் இவ்வளவு ஆக்ரோசமாக இவ்வளவு உண்மையாக நிகழ்த்திக் காட்டியவர் புரூஸ்லீக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என உறுதியாகக் கூறலாம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங்_அரசு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கலச்_சிலை-யை 46 லட்சம் செலவில் நிறுவியது. 

டைம்ஸ்_பத்திரிக்கை கடந்த நூற்றாண்டின் சமூகத்தைப் பாதித்த சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் புரூஸ்லீயையும் சேர்த்துள்ளது. 

ஒரு கலையை எப்படி நேசிப்பது, அது எங்கனம் உச்சத்துக்குக் கொண்டு செல்வது என்பதைக் கற்றுக் கொள்ளும் வண்ணம் அனைவருக்கும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார்.


நன்றி,
ஸ்டெர்லைட்டும் ஐந்து விதி மீறல்களும்

முதல் விதிமீறல்


 900 டன் உற்பத்தியிலிருந்து, 1200 டன் தின உற்பத்தி திறன் அளவுக்கு 2007 ஆம் ஆண்டு இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கம் செய்யும் போது தங்களிடம் 172 ஹெக்டேர் நிலம் இருப்பதாக ஸ்டெர்லைட் சொல்கிறது. இந்த நிலத்தில் தங்களால் தேவையான அளவுக்கு மரங்களை நட முடியும் (Green Belt area), திடக்கழிவு மேலாண்மை செய்ய முடியும் என்கிறது நிறுவனம். ஆனால், அந்த நிறுவனத்திடம் அப்போதும் 172 ஹெக்டேர் நிலம் இல்லை. இப்போதும் அவ்வளவு நிலம் இல்லை. அதாவது பொய் சொல்லி அந்த அனுமதியை வாங்கி இருக்கிறார்கள்


இரண்டாவது விதிமீறல்


" புகை போக்கி " நிறுவனம் வளர வளர புகை போக்கியும் வளர வேண்டும். அந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு 40,000 டன் என்பது அதன் உற்பத்தி திறன். அப்போது அதன் புகை போக்கியின் உயரம் 60 மீட்டர். இப்போது அதன் உற்பத்தி திறன் 4 லட்சம் டன். ஆனால், இப்போதும் அதன் புகை போக்கியின் உயரம் அதே 60 மீட்டர்தான் புகை குழாய்.


மூன்றாவது விதிமீறல்


மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அபாயகரமான தொழிற்சாலைகள் இருந்தால், அதனை சுற்றி அரை கிலோமீட்டரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பசுமை பகுதி இருக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு அதிலிருந்து விதிவிலக்கு. இதன் பசுமைபகுதி 25 மீட்டர் சுற்றுக்கு இருந்தால் போதும். ஆனால், அந்த 25 மீட்டருக்கு கூட அவர்கள் பசுமை பகுதியை அமைக்கவில்லை இல்லை. சுலபமாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், வெவ்வேறு மரங்களை, வெவ்வேறு உயரங்களில் வளர்க்க வேண்டும். தொழிற்சாலை உமிழும் மாசை குறைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், இதையும் அவர்கள் செய்யவில்லை


நான்காவது விதிமீறல்


" சுகாதார ஆய்வு "மீண்டும் ஸ்டெர்லைட் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தபோது, இந்த தொழிற்சாலை ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுகாதார கண்காணிப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்றது. ஆனால், இப்போது வரை இதனை செய்யவில்லை. மருத்துவ முகாம் மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சுகாதார ஆய்வு செய்தால் தங்களுக்கு எதிரான தகவல்கள் வரும் என்பதற்காக இதனை செய்யவில்லை.


ஐந்தாவது விதிமீறல்


நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி, அபாயகரமான தொழிற்சாலைகள் அவ்வாறான தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும்தான் அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடம் மக்கள் பகுதியில்

Image Courtesy : Fb.com/gravitynull

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 அப்பாவிகளின் தீர்ப்பு வரும்முன்னரே பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் திறக்க அனுமதி கொடுத்தது "இந்திய தேசத்தில் ஜனநாயகமும் நீதி தேவதையை போல் கண்களை கட்டி கட்டிக்கொண்டு பராக்கு பார்க்கிறது" என்பதை தெளிவுபடுத்துகிறது :(  


நன்றி 
சூழலியலாளர் நித்தியானந்த் & BBC தமிழ் 

தேர்தல் தேர்வுகள்

தூக்கு தண்டனையிலிருந்து ஒருத்தர மட்டும் காப்பாத்த சொல்லி அரசாங்கம் உங்க கிட்ட சொல்லுது, ஒருத்தன் 10 கொலை செஞ்சவன், இன்னோருத்தன் 10,000பேர் கிட்ட திருடுனவன் நீங்க யாரை காப்பாத்துவீங்க??


" இத படிக்கிறப்ப நம்ம ஊர் தேர்தல் மனசுல வந்து போகுதா... அப்போ நீங்களும் நம்ம ஊர் அரசியல் காரணமா பாதிக்கப்பட்ட ஒருத்தர் தான்.


பணம் மதிப்பிழப்பு அலப்பறைகள்  
ரூபா நோட்ட இரவோடு இரவா செல்லாதுனு சொல்லி நாள் கணக்குல ATM வாசல்ல நிக்கவச்சு வேடிக்க பாத்த ஒரு தேசிய கட்சி, கேட்டா கருப்பு பணம் ஒழிக்க கொடுத்தக கசப்பான கஷாயம்னு சொல்லி காண்டு ஏத்துவாங்க.

15 லட்சமும் திருநெல்வேலி ஹல்வாவும் 
சரி சாமி அந்த 15லட்சம் எப்போ வரும்னு கேட்டா?? பிம்பிளிக்கி பிளாப்பினு ஒரு கதை சொல்லி மொக்க போட ஆரம்பிச்ருவாங்க !!

ஒக்கி புயலும் ஓடாத விமானமும் 
முதலமைச்சர் தம்பிய மருத்துவம் பாக்க உடனடியா போர் விமானம் அனுப்புவாங்க ஆனா ஒக்கி புயல் அப்போ மீட்பு பணிக்காக கேட்டா வானிலை சரி இல்லனு சப்ப காரம் சொல்லி ஜித்தன் ரமேஷ் மாதிரி மறஞ்சு போயிருவாங்க.

ஈழமும் ரத்த கரையும் 
நாங்க போர் வந்தாலும் காந்தி வழி(லி) தான் நிப்போம், கண்ணு முன்னாடி பல பேர் செத்தபோது கண்களை மூடிக்கொண்டும், கூக்குரலும் அலறலும் கேட்ட போது காதுகளை மூடிக்கொண்டும், BBC போன்ற ஊடகங்கள் உயிரை பணயம் வைத்து எடுத்தக ஆதாரங்களை பயன் படுத்தாமல் கோட்டை விட்ட மற்றஒரு தேசிய கட்சி. ( - ஈழத்தில் உயிர் நீத்த உறவுகள் .)

கட்சியும் ஏல சீட்டு கம்பனியும் 
இது எல்லா ஒரு கட்சியானு நம்ம ஆச்சரிய படும் வண்ணம் பல தனித்துவமான ஆராய்ச்சி வல்லுநர்களை தங்களோட அமைச்சர் அவைள வச்சி தினம் தினம் ஒரு அறிக்கை விட்டு சோகத்துல இருக்கிற மக்களை மகிழ்விப்பது மட்டும் தான் அவுங்க வேலை
(ஓடும் நீர் ஆவி ஆகாமல் இருக்க தெர்மக்கோல் வைப்பது, ஆம்னி பஸ் ஏறி வந்த டெங்கு கொசுவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, சத்தம் இன்றி பேருந்து கட்டண விலையை உயர்த்துவது, இடிந்த அணைக்கு காச்சல் வந்துவிட்டதாக கதை கூறுவது, தேவை இல்லாத சாலையை போட்டே தீருவேன் என அடம்பிடிப்பது .. இவை எல்லாம் சில சிறந்த உதாரணங்கள்.)

இவுங்களோட அரசாணையை நீதி மன்றங்கள் கூட மதிக்காது என்பதே இவர்களின் தனித்துவம். (IG மாணிக்கவேல், STERLITE ஆகிய தீர்ப்புகள் சிறந்த  உதாரணங்கள்)


Image Courtesy : Vikatan web  


நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக்கொண்டு மிச்சம்மீதி கதைகளை மற்றொரு கோப்பில் தொடரும்...

முடிவுரை 
மூடிட்டு ஏதாச்சு ஒரு buttonந அழுத்த தான் போறோம் தேர்தல் வரும்போது.. எதுக்கு கருமோ முடிவுரை!!

நன்றி .
கடுப்புடன் குடிமகன்