சினிமா பொங்கல் 2019

சுவாசிக்குற காற்றுல இருந்து சாப்பிடும் ஒவ்வொரு அரிசிலையும் அரசியலோட சாயல் இருக்குனு லெனின், மாவோ மாதிரியான தலைவர்கள் சொல்லுவாங்க, ஆனா அந்த அரசியலோட முக்கிய முடிவுகள எடுக்க கூடிய முக்கிய பிரதிநிதியா இருக்கிறது சினிமா... இத அவளோ சீக்கிரம் யாராலும் மறுக்க முடியாது.

Image Courtesy:  Fb.com/GravityNull

 ( பின்குறிப்பு :- புது படம் ரிலீஸ் ஆனா உடனே கைல உள்ள காச பட போஸ்டர், பேனர், கட்-அவுட், பால் அபிசேகம், ரசிகர் மன்றம், சிறப்பு காட்சி இப்டி பாகுபாடு இல்லாம புத்திசாலிதனமா சுய அறிவோட செலவு செய்யுற தீவிர ரசிகர்கள் இந்த பதிவை தவிர்ப்பது நல்லது.)

 MGR சிவாஜி காலத்துல இருந்து அஜித் விஜய் காலம் வர ஒவ்வொரு நடிகனும் தங்களோட தனிப்பட்ட மற்றும் அரசியல் கருத்துக்கள ஏதாவது ஒரு வகையில சொல்லிகிட்டே தான் வராங்க. இன்னும் பல கிராமத்துல இரட்டைஇலை, உதய சூரியன் இந்த ரெண்டு கட்சி சின்னத்துல யார் நிக்கிறாங்கனு கூட பாக்காம ஒட்டு போடுற மக்கள் இன்னும் இருக்காங்க,  காரணம் 1980கள்  - 1990கள் ஏற்படுத்துன சினிமா தாக்கம்.

சிகரெட் பிடிக்காதீங்க, தண்ணி அடிக்காதீங்க... இப்டி சில நல்ல கருத்துக்கள ஒரு சில நல்ல நடிகர்களும்  தொடர்ந்து சொல்லிட்டே தான் இருகாங்க, நம்ம அத செயல்படுத்துறோமா இல்லையான்றது வேற விஷயம். ஆனா இங்க மதம் மொழி சாதி இதுல ஏற்படாத பிரிவினை கூட தலையா தளபதியா, தலைவரா ஆண்டவரா இப்டி ரசிகர்கள் மத்தில ஒரு தேவை இல்லாத பெரிய பிரிவினை ஒன்னு ஓடிட்டு இருக்கு. சில பல சமயங்கள் இந்த ரசிகர்களோடு சண்டை கத்தி குத்து, அரிவாள் வெட்டு வரைக்கும் போயிருது.
ஒரு 10நண்பர்கள் கூடியுள்ள இடத்துல கூட இந்த விஷயத்தை பத்தி பேசுனா கண்டிப்பா ஒரு சலனமோ சண்டையோ வந்ததே தீரும், இத யார்னாலையும் மறுக்க முடியாது.
தங்களோட தனிப்பட்ட மற்றும் அரசியல் கருத்துக்கள திரையில தைரியமா காட்ற சினிமாவாசிகள் ஏன் ஒருதடவை கூட "நாங்க எல்லா ஒண்ணா தான் இருக்கோம் நீங்க ஏன்  சண்டை போடுறீங்க.." அப்டீன்னு சொல்லாது ஏன்?
போட்டி இல்லாட்டினா படம் ஓடாதுன்ற பயமா இருக்க வாய்ப்பு இல்ல!! அப்பறம் ஏனோ!!
ஆனா இந்த மாறி பெரிய நடிகர்களோட ரசிகர்கள் நடத்துற சண்டை எதோ ஒரு வகைல பட தயாரிப்பாளர்களுக்கு வசதியா போச்சு போல... எங்க ஆள் படம் வசூல் 100கோடி 125கோடி 250கோடி எல்லா ரசிகர்களும் கோடில தான் பொரளுறாங்க, படம் எடுத்த தயாரிப்பாளரும், விநியோகிஸ்தரும் கூட இவள தூரம் இறங்கி சண்டை போட மாட்டாங்க போல :P
ஆனா இந்த பொங்கல்ல "பேட்ட "விசுவாசம் இந்த 2படமும் எடுக்காத ஒரு வசூல TASMAC பாத்துருச்சு 600கோடி (1வார வசூல்) இது எந்த ஆண்டும் இல்லாத ஒரு புது வரலாற்று வசூல் 😂👌 ஆக!! வெற்றியாளர் யாருனு நீங்களே முடிவு பண்ணிகோங்க. (Source : IndianExpress)


எதோ ஒரு திரைப்பட விழாவிலோ நேர்காணல்லையோ நமக்கு பிடுச்ச ஒரு நடிகரும் பிடிக்காத ஒரு நடிகரும் நேர் எதிர்ல சந்திச்சு பேசுற அந்த புகைப்படமோ கானொலியோ அந்த நாளோட முக்கிய நிகழ்வுகளா முக்கிய செய்தில வரும்போது, அவுங்க ரசிகர்கள பாத்து 'நீங்க எப்போவும் ஒற்றுமையா தான் இருக்கனும்'னு சொல்ற சின்ன பேட்டி என்னைக்காச்சு நடக்காதான்னு பகல் கனவு காணுற பல நூறு கோடி ரசிகர்கள்ல நானும் ஒருத்தன்...