தேர்தல் தேர்வுகள்

தூக்கு தண்டனையிலிருந்து ஒருத்தர மட்டும் காப்பாத்த சொல்லி அரசாங்கம் உங்க கிட்ட சொல்லுது, ஒருத்தன் 10 கொலை செஞ்சவன், இன்னோருத்தன் 10,000பேர் கிட்ட திருடுனவன் நீங்க யாரை காப்பாத்துவீங்க??


" இத படிக்கிறப்ப நம்ம ஊர் தேர்தல் மனசுல வந்து போகுதா... அப்போ நீங்களும் நம்ம ஊர் அரசியல் காரணமா பாதிக்கப்பட்ட ஒருத்தர் தான்.


பணம் மதிப்பிழப்பு அலப்பறைகள்  
ரூபா நோட்ட இரவோடு இரவா செல்லாதுனு சொல்லி நாள் கணக்குல ATM வாசல்ல நிக்கவச்சு வேடிக்க பாத்த ஒரு தேசிய கட்சி, கேட்டா கருப்பு பணம் ஒழிக்க கொடுத்தக கசப்பான கஷாயம்னு சொல்லி காண்டு ஏத்துவாங்க.

15 லட்சமும் திருநெல்வேலி ஹல்வாவும் 
சரி சாமி அந்த 15லட்சம் எப்போ வரும்னு கேட்டா?? பிம்பிளிக்கி பிளாப்பினு ஒரு கதை சொல்லி மொக்க போட ஆரம்பிச்ருவாங்க !!

ஒக்கி புயலும் ஓடாத விமானமும் 
முதலமைச்சர் தம்பிய மருத்துவம் பாக்க உடனடியா போர் விமானம் அனுப்புவாங்க ஆனா ஒக்கி புயல் அப்போ மீட்பு பணிக்காக கேட்டா வானிலை சரி இல்லனு சப்ப காரம் சொல்லி ஜித்தன் ரமேஷ் மாதிரி மறஞ்சு போயிருவாங்க.

ஈழமும் ரத்த கரையும் 
நாங்க போர் வந்தாலும் காந்தி வழி(லி) தான் நிப்போம், கண்ணு முன்னாடி பல பேர் செத்தபோது கண்களை மூடிக்கொண்டும், கூக்குரலும் அலறலும் கேட்ட போது காதுகளை மூடிக்கொண்டும், BBC போன்ற ஊடகங்கள் உயிரை பணயம் வைத்து எடுத்தக ஆதாரங்களை பயன் படுத்தாமல் கோட்டை விட்ட மற்றஒரு தேசிய கட்சி. ( - ஈழத்தில் உயிர் நீத்த உறவுகள் .)

கட்சியும் ஏல சீட்டு கம்பனியும் 
இது எல்லா ஒரு கட்சியானு நம்ம ஆச்சரிய படும் வண்ணம் பல தனித்துவமான ஆராய்ச்சி வல்லுநர்களை தங்களோட அமைச்சர் அவைள வச்சி தினம் தினம் ஒரு அறிக்கை விட்டு சோகத்துல இருக்கிற மக்களை மகிழ்விப்பது மட்டும் தான் அவுங்க வேலை
(ஓடும் நீர் ஆவி ஆகாமல் இருக்க தெர்மக்கோல் வைப்பது, ஆம்னி பஸ் ஏறி வந்த டெங்கு கொசுவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, சத்தம் இன்றி பேருந்து கட்டண விலையை உயர்த்துவது, இடிந்த அணைக்கு காச்சல் வந்துவிட்டதாக கதை கூறுவது, தேவை இல்லாத சாலையை போட்டே தீருவேன் என அடம்பிடிப்பது .. இவை எல்லாம் சில சிறந்த உதாரணங்கள்.)

இவுங்களோட அரசாணையை நீதி மன்றங்கள் கூட மதிக்காது என்பதே இவர்களின் தனித்துவம். (IG மாணிக்கவேல், STERLITE ஆகிய தீர்ப்புகள் சிறந்த  உதாரணங்கள்)


Image Courtesy : Vikatan web  


நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக்கொண்டு மிச்சம்மீதி கதைகளை மற்றொரு கோப்பில் தொடரும்...

முடிவுரை 
மூடிட்டு ஏதாச்சு ஒரு buttonந அழுத்த தான் போறோம் தேர்தல் வரும்போது.. எதுக்கு கருமோ முடிவுரை!!

நன்றி .
கடுப்புடன் குடிமகன்