Research beyond Death (தமிழ்)

மரணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள்


இவ்வுலகையும் அதில் வாழும் உயிரினங்களையும் கடவுள் படைத்தானா அல்லது இயற்கை படைத்ததா என்று இங்கு மனிதர்களுக்கு பல குழப்பங்கள் இருக்கின்றன
அந்த குழப்பத்திற்கு மனிதர்கள் தங்கள் #கடவுள்_நம்பிக்கை அடிப்படையில் கடவுள் படைத்ததாகவும் #கடவுள்_நம்பிக்கை_இல்லாதவர்கள் இயற்கை படைத்ததாகவும் நம்புகின்றனர்
நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும் மனிதன் பிறந்துக்கொண்டு தான் இருக்கின்றான்
#பிறப்பு எப்படியோ அதைபோன்று தான் #இறப்பு-ம்
ஆனால் பிறப்பைக்கொண்டாடும் மனிதர்கள் இறப்பைக் கொண்டாடுவது கிடையாது
#மரணம் என்றால் இங்கு அனைவருக்கும் பயம் என்ற உணர்வுதான் வருகின்றது

இதை நான் பதிவு செய்துக்கொண்டு இருக்கும் இந்த நாளில் இவ்வுலகில் 😦3,45,261 மனிதர்களுக்கு மேல் பிறந்துக்கொண்டு இருக்க 😨1,43,211 மனிதர்களுக்கு மேல் இறந்துக்கொண்டும் இருக்கின்றனர்
இவர்கள் அனைவரும் 10 மாதங்கள் சுமக்கபட்டு ஒரே முறையில் பிறந்தாலும், இவர்கள் இறக்கும் முறைகள் வெவ்வேறு காரணங்களாகத் தான் இருக்கின்றது
ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்று அவர்களுக்கே தெரியாது ஆனால் வெவ்வேறு வழிகளில் மனிதனை மரணம் வந்து அடைகிறது


😈பழங்கால போர்க்களங்கள் மற்றும் தற்க்கால போர் கொலைகள்
இந்த உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் மரணம் அடைய ஒரு காரணம் #போர்க்களங்களே ஆகும் 

🔹நிலம் 🔹பணம் 🔹பொருள் ஏன் பெண்களுக்காக கூட போர்கள் நடந்து இருக்கின்றது அதற்காக பல மனிதர்களும் சண்டைப்போட்டு இறந்தும் இருக்கின்றனர் ஒவ்வொரு காலங்களிலும் வெவ்வேறு விதமான போர்களால் மனிதர்கள் இறக்கின்றனர் ஆனால் தற்போதைய காலக்கட்டங்களில் போர்கள் என்ற பெயரில் போர் கொலைகள் தான் நடக்கிறது
🔸சிரியா🔸லெபனான்🔸ஈராக்🔸பாலஸ்தினா போன்ற எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் மீது #சர்வாதிகாரம் கொண்ட நாடுகள் #தீவிரவாதிகளை அழிக்க அந்தந்த நாடுகளுக்கு உதவுதாக சொல்லிக்கொண்டு அந்த நாட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கின்றது
ஏன் நம் நாட்டில் கூட நம் இராணுவம் புதிதாக வாங்கிய பெல்லட் துப்பாக்கிகளை 🔸காஷ்மீர் மக்கள் மீது சுட்டுதான் சோதித்துக்கொண்டது பின் உரிமைக்காக போராடிய மக்களை #சமூக_விரோதிகள் என்று 🔸தமிழ்நாட்டிலும் சுட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்
இதில் #மூன்றாம்_உலக_போர் எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் தான் தற்போது இந்த உலகம் உள்ளது °


😈தற்கொலைகள் மற்றும் கொலைகள்
🔹பகை 🔹வன்மம் 🔹நரபலி 🔹சாதி பாகுபாடு
🔹மதப் பாகுபாடு 🔹இனப் பாகுபாடு என்று நம் நாட்டிலும் இன்னும் ஒரு மனிதன் சக மனிதனை ஈவு இரக்கமின்றி #கொலை செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர்
மேலும் ஒரு காலத்தில் #பெண்_குழந்தை பிறந்தால் அதை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடுவார்கள்
இது ஒருபுறம் இருக்க 🔻தற்கொலைகளில் மற்றொருபுறம் மனிதன் தன் உயிறை மாய்த்துக் கொள்கிறான்
🔸பெங்களூரை சேர்ந்த இளம் வயது பெண் ஒருவர் வலி குறைவான முறையில் தற்கொலை செய்வது எப்படி என்று தற்கொலை முறைகளை இணையதளத்தில் தேடி படித்து அதன்பின் தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள்😨


Robin Williams Happy Feet premiere.jpg
Robin Williams
இது ஒரு புறம் இருக்க இவ்வுலகையே தன் நகைச்சுவை உணர்வால் கட்டிப்போட்டு சிரிக்க வைத்த நடிகர் #Robin_Williamsஅவரே தன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார் என்பது கசப்பான உண்மை தன்னால் ஒரு உடலுக்கு உயிரை குடுக்க இயலாத போது அந்த உடலில் இருந்து உயிரை எடுப்பது எப்படி நியாயமாகும் என்பது தெரியவில்லை

😈மரணத்தை வெல்ல நினைக்கும் பேராசை மனிதர்கள்
மரணங்கள் இப்படி பல வழிகளில் நிகழ்ந்துக்கொண்டே இருந்தாலும் பல பேராசை மனிதர்களுக்கு😏 இறப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மை
ஆனால் அவர்களுக்கு எப்படி இறப்பை வெல்லுவது என்றும் தெரியவில்லை இது இப்படி இருக்க இன்னொரு பக்கம் இருக்க பலர் இறக்க விருப்பம் இல்லாமலே இறந்து விடுகின்ற நிகழ்வும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் பணம் படைத்த சில பேராசை மனிதர்கள் தாங்கள் இறப்பை வெல்லுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்திருக்கின்றனர்
Fred & Linda

#
Fred_and_Linda_Chamberlain என்பவர்களால் 1972 ம் ஆண்டு#Alcor_Life_Extension_Foundation என்ற ஒரு நிருவனம் தொடங்கப்பட்டது அந்த நிருவனத்தின் வேலை என்னவென்றால் மரணம் அடைந்த மனிதர்களின் மூளைகளில் இருந்து அவர்களது நினைவுகளை கணினிகளின் உதவியுடன் பதிவுசெய்துக்கொண்டு அந்த மனிதனின் உடல்களையும் பாதுக்காப்பாக பதப்படுத்தி வைத்துக்கொள்வதே இதற்கு அவர்கள் பெரும் கோடிகளை விலையாக பெற்றுக்கொள்கின்றனர்


இவர்கள் இப்படி செய்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மனிதர்கள் மரணத்தை வெல்ல பல ஆராய்சிகள் நடத்திக்கொண்டு இருக்கின்றது அதிக படியாக இன்னும் 100 வருடங்களில் மனிதன் மரணமே இல்லாமல் வாழலாம் என்று சொல்லப்படுகிறது அப்போது இறந்தவர்களை உயிர் பெற செய்யும் அளவிற்கு அறிவியல் வளர்ந்து இருக்கலாம் அந்த நிலையில் இவர்கள் மீண்டும் இதே உடலில் இவர்களில் பழைய நினைவுகளுடன் உயிர் பெற்று வாழலாம் என்று கூறுகின்றனர்

இதில் மரணத்தை விரும்பாத 1618 பேர் உறுப்பினர்களாக இணைந்து இருக்கின்றனர்😏
இதில் மரணம் அடைந்த 149 பேரின் நினைவுகளும் உடல்களும் பதப்படுத்தப்பட்டுள்ளது இது ஒருபுறம் இருக்க, மனிதர்கள் 1000 வருடத்திற்கு மேல் வாழ முடியும் அதற்கான ஆராய்ச்சியில் இந்திய மதிப்பில் 3000 கோடிகளை கொட்டி #google நிறுவனம் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கின்றது


Larry Ellison, CEO of ORACLE
இதை 2045 ம் வருடத்திற்குள் நிகழ்த்த சாத்தியம் உள்ளதாக என்று #லார்ரி_எலிசன் oracle ன் CEO, 2015 ஆண்டு ஏப்ரலில் சொல்லியிருந்தார் இறப்பை தோற்கடிக்க விரும்புகிறேன், எனக்கு இறப்பது பிடிக்கவில்லை என்று #லார்ரி_எலிசன் oracle ன் CEO கூறுகிறார்
அவர் இறப்பை வெல்ல 2500 கோடியை முதலீடு செய்து ஆராய்ச்சியை செய்து வருகின்றார் இவர் உலகிலயே 5 வது மிகபெரிய பணக்கார் ஆவார் இது போல் 
#பீட்டர்_தியில் PAY PAL FOUNDER தான் கடவுள் போல் மரணிக்காமல் வாழ்ந்துக்கொண்டே இருக்க விரும்புவதாக
சொல்லி இருக்கின்றார்
ஆசைகளை துறந்து போதிப்பெற்ற #புத்தர்-யை பின் பற்றும் புத்த மத தலைவர் #தலாய்லாமா PROJECT 2045 என்ற மனிதன் தன்னை கடவுளாக நினைத்துக்கொண்டு இயற்கையை எதிர்த்து மரணத்தை வெல்ல செய்யும் ஒரு பேராசையான ஆராய்ச்சியின் முயற்சியை பாராட்டி ஆசிர்வதித்துள்ளார்
David Goodall

😈பேராசையை மரணத்தால் வென்ற மனிதன்
இப்படி பேராசை மனிதர்கள் ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருக்க மற்றோரு புறம் #DAVID_GOODALL என்ற மனிதர் தனது 94 வது வயதில் முதுமையின் காரணமாக தன்னை#கருணைக்கொலை செய்து விடுமாறு ஆஸ்திரேலியாவில் இருக்கும் நீதிமன்றத்தில் அனுமதிக்கேட்க அந்த நாட்டு சட்டத்தில் கருணைக்கொலை தடை செய்யப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு அரசு அவரின் மனுவை தள்ளுபடி செய்கின்றது
ஆனால் அவர் தன் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை இதனால் அவர் கருணைக்கொலை சட்ட பூர்வமாக அனுமதிக்கும் நாடான சுவிட்சர்லாந்துக்கு சென்று அந்த நாட்டு நீதிமன்றத்தில் போராடி கருணைக்கொலை மூலம் மரணிக்க அனுமதி பெற்றுக்கொள்கிறார்
இந்த மரணத்திற்கு அவர் நீதிமன்றத்திடம் 10 ஆண்டுகள் போராடி அவருடைய 104 வது வயதில் அனுமதி பெற்றார்
பின் அவர் தன் கடைசி ஆசையாக தான் மரணிப்பதற்கு முன்பு தனது 👶பேரக் குழந்தைகளுடன் 1 நாள் விளையாடி விட்டு பின் மரணிப்பதாக கூறுகின்றார் பின் அது போல் தன் கடைசி நாளை மகிழ்ச்சியாக தன் பேரக்குழந்தைகளுடன் செலவிட்டு பின் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் 🔻மே 18 2018 அன்று தன் மரணத்தை ஏற்றுக்கொண்டார்
முதுமை தவிர இவர் உடம்பில் வேறு எந்த குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரிடம் தங்களுக்கு வாழ ஆசையில்லையா
என்று கேட்டதற்கு நான் பிறந்தேன் என் வாழ்க்கையையும் வாழ்ந்தேன் அதுபோல் நான் இறப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்


😈மரணத்தின் எல்லையில் மனிதர்கள் கற்றுக்கொள்ளும் பாடம்
இப்படி மனிதர்களுக்கு மரணத்தைப்பற்றி வெவ்வேறு மாதிரியான அபிப்ராயங்கள் இருந்தாலும் மரணம் அனைவருக்கும் வந்தே தீரும்
நாம் தினமும் உண்ணும் உணவை போன்று தான் நம் வாழ்க்கையும் நாம் உண்ட உணவை மறுநாள் வெளியேற்றுயே தீர வேண்டும் இல்லை என்றால் நாம் பிழைப்பு நாரிவிடும் சிறிது நாட்களுக்கு முன்பு
நடிகர் #இர்பான்_கான் தான் கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை
என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார் அப்போது அவர் மேலும் கூறிய வார்த்தைகள் மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது
அவர் கூறியது தான் மெல்ல மெல்ல போராடி வாழ்க்கையில் ஒரு உயரத்திற்கு வந்த நிலையில் தான் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க அப்போது யாரோ ஒருவர் வந்து தன்னிடம் உன் வாழ்க்கையில் நீ மரணிக்கும் நேரம் இது
என்று கூறியது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது
என்று அவர் கூறினார் இதுபோல் #APPLE நிறுவனத்தின் தலைவர் #STEVE_JOBS ம் கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தனது கடைசி காலத்தில் தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தும் எந்த பயனும் இல்லை தன்னுடைய நோயையும் அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்துவது இயலாத காரியம் ஆகிவிட்டது. நான் என் வாழ்க்கையில் எதையோ தேடி சென்று வாழ்க்கையை வாழ மறந்து விட்டேன்
என்று கூறியிருந்தார்
இதனால் நாம் எப்படி மரணத்தை வெல்லலாம் என்று நினைப்பதை விட உயிர் வாழும் காலங்களில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ கற்றுக்கொள்வோம் பின் மரணத்தின் போது நிம்மதியாக விடுதலை அடைவோம்
இதை முழுவதுமாக படித்துமுடித்த உங்களுக்கு இந்த அறிவியல் உலகில் மனிதன் மரணத்தை வெல்ல நினைப்பதில் என்ன பேராசை இருக்கின்றது என்று நீங்கள் கேட்க கூடுமாயின் 10 வருடங்கள் போராடி 104 வது வயதில் தன் மரணத்தை பெற்றுக்கொண்ட DAVID GOODALL லும் ஒரு #அறிவியல்_ஆராய்ச்சியாளர் தான் தன் வாழ்க்கையில் பல ஆராயிச்சிகளை செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது


Thanks to
~
#தமிழ்பித்தன்_ஜாய் (Joy Son)

Dont forgot to subscribe us...Memes, templates, stories and even more... Just for you :)

Loading...