தோழர் பாரதி vs XNXX


சுதந்திரம் பெற்று அறைநூற்றாண்டு கடந்தும் மகாத்மாவின் கனவு கனவாகவே உள்ளது

உடல்முழுக்க நகை அணிந்து நடு இரவில் நெடுந்தூரம் பாதுகாப்பான ஓரு பயணம்.. நடு ராத்திரியா நம்ம ஆளுங்க பகல்லையே நடக்க விடமாட்டாங்க.
"நிர்பையா பலாத்காரம் செய்யுரப்ப அமைதியா இருந்தா உயிரோட விட்ருப்பாங்க"னு சொல்ர அற்புதமான மனிதர்கள் வாழும் வர இந்தியல மகாத்மாவின் கனவு கனவாகவேதான் இருக்கும்.


சோனியாகாந்தி, மம்தாபேனரஜீ, நிர்மலா சீதாராமன், தமிழிசை மாதிரியான ஆளுமை படைத்த பெண்கள் வாழும் இந்த நாட்டுலதான் சுவாதி, ஹாசினி, லாவண்யானு பெயர் தெரிஞ்சும் தெரியாமலும் தினம் பலர் பலியாகிட்டு வராங்க


தனிமனித ஒழுக்கம்னா பெண்கள் உடை நடை பாவம்ல அடக்குமுறை கொண்டுவரது இல்ல, இங்க 6வயசு பெண்ணுக்கும் 60வயசு பெண்ணுக்கும் ஒரே கொடுமைதான் நடக்குது.. இல்ல பெண்கள் உடைல அடக்குமுறை கொண்டுவந்தே திறனும்னா நம்ம ஊருக்கும் அரபு நாட்டுக்கும் வித்தியாசம் இல்லாம போயிறும்.
காதலுச்ச பொண்ணு கலட்டி விட்டா மூஞ்சில ஆசிட் அடிப்பேனு சொல்ர பசங்களா எல்லாம் பட்டியல்போட்டு ஒரு Mental Counselling கொடுத்தாலே பாதி பிரச்சினை சரி ஆகிடும்.

எவ்வளவு பெரிய சட்டம் வந்தாலும் காலையில பெரியார் மாதிரி பெண்ணியம் பேசிட்டு ராத்திரி xnxxல தஞ்சம் புகுர மக்கள் தனிநபர் ஒழுக்கம் கத்துக்க வர இங்கே எதுவும் மாறாது.


உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
சாத்தி ரங்கள் பற்பல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வாராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம்;
மூடக்கட்டுக்கள் யாவுந் தகர்ப்பாராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவுளர்க்கினி தாகச் சமைப்பாராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வாராம்;
மாற்றி வையம் புதுமை யுறச் செய்து
மனிதர் தம்மை அமரர்களாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை, நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்.
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
- தோழர் பாரதி :)Cartoon credits to Rooban &
content image copyrights to
CreativeCommons share alike remix:)